book

துள்ளும் இளமைக்கு யோகா

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :131
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789389021974
Add to Cart

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை  வளர்த்தேன்உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். வாழ்வாங்கு வாழ, புகழ்பெற உடல்நலமும் உளநலமும் தேவை. நோயில்லாத உடலே இல்லை என்னும்படி இன்றைய நிலை உள்ளது. அதற்குக் காரணமாக உணவுமுறை, முறையாக உடலைப் பேணாமை, சரியான பழக்க வழக்கங்களைப் பின்பற்றாமை போன்றவற்றைக் கூறுவர். எனினும் உடலைப் பேணுவதற்கு உணவு முறையும் பயிற்சியும் மிகவும் முக்கியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் '' துள்ளும் இளமைக்கு யோகா மூலிகை குறிப்புகள்'' என்னும் இந்த நூல் அமைந்துள்ளது. முறையாக சில பயிற்சிகளைச் செய்தால் உடல்நலமும் காக்கப்படுவதோடு மனநலமும் காக்கப்படும்  வழிகளை இந்நூல் கூறுகிறது. மூச்சுப்பயிற்சி, சூரிய வழிபாடு, ஆசனங்கள் செய்தல், சித்தர் மூலிகைகள் போன்ற பின்பற்றப்பட வேண்டிய ஒழுக்கங்களை இந்நூல் கூறுகிறது.