மலர்வனம் (மௌலானா ரூமி)
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நரியம்பட்டு எம்.ஏ. சலாம்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :191
பதிப்பு :1
Published on :2016
Add to Cartசூஃபிக் கூடம் (தைக்கா / ஃகான்காஹ்) ஒவ்வொன்றும் ஒரு பூங்காவைப் பெற்றிருந்தது. புறவுலகை விட்டும் அது உயரமான நெடுஞ்சுவர்களால் கவசமிடப்பட்டிருந்தது. பெரும் பறவை ஒன்றின் நீளும் சிறகினைப் போல் சூஃபிக் கூடத்தைக் கட்டமைக்கும் பல கட்டிடங்களையும் இணைக்கும் மையப் புள்ளியாகப் பூங்கா அமைக்கப்பட்டது. தியானமும் ஞான இசையும் நிகழும் ’சமாஃகானா’, ஞான உரையாடல்கள் நிகழும் ’மஜ்லிஸ்’, பெண்களின் தனியிடம் (ஹரம்), மடப்பள்ளி (அதாவது, சமையலறை), நூலகம், நீர்த்தடாகம், குருவின் இல்லம் மற்றும் பள்ளிவாசல் ஆகியன எல்லாம் அந்தப் பூங்காவிலிருந்து செல்ல முடிந்தவையாக அமைந்தன.