book

எண்ணெய் மற மண்ணை நினை (பருவப் பிறழ்வு, பெட்ரோல் தாகம், உணவுப்பற்றாக்குறை)

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வந்தனா சிவா
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :198
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788193395547
Add to Cart

இன்று உலகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான பாதையை தெளிவாக வரையறுத்துத் தரவில்லை. சொல்லப்போனால் நெருக்கடிக்கான பொறுப்பை மனித குலத்திற்கும் இயற்கைக்கும் குற்றம் இழைத்த பொறுப்பை அது ஏற்றாக வேண்டும். விவசாயத்தை, உணவை தொழில் மயப்படுத்தியதால் மனிதகுலம் இன்று சுய அழிவின், சுய விலகலின் சறுக்குப் பாதையில் நிற்கிறது. தாவரப்பன்மயத்திற்கான, சூழலியலுக்கான, உள்ளூர் உணவு முறைக்கான இயக்கம் கட்டப்படும்போது அது பருவநிலை, ஆற்றல், உணவு  என அனைத்து நெருக்கடிகளையும் தீர்ப்பதாக இருக்கும். இவை அனைத்தும் மக்களை மீண்டும் வேளாண்மைக்குள் கொண்டு வருகிறது. சத்தான உணவையும், அடிப்படை ஆற்றல்களையும் கோருகிறது. புதிய கோணத்தில் சிந்திக்கும் முறை, செயல்படும் முறை, இருத்தல், நடைமுறை அனைத்தும் புத்தாக்க மாற்றில் இருந்து சிறிய சமூகமாக உழைப்பதில் இருந்து, சிறிய பண்ணைகளில் இருந்து, சிறிய நகரங்களில் இருந்து எழுந்து வர வேண்டும்.