book

பாரதியின் கலை இலக்கியக் கோட்பாடுகள்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. பஞ்சாங்கம்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

"பாரதியாரின் கலை இலக்கியக் கோட்பாடுகள்" - என்ற இந்த நூல் இப்பொழுது உங்கள் கையில் இருக்கிறது. தொலைந்துபோன குழந்தை மீண்டும் கிடைத்தால் ஒரு தாய் எப்படி மகிழ்வாளோ அப்படியொரு மகிழ்ச்சி எனக்கும் கிடைக்கும்படியான அற்புத கணங்களைக் “கதிர்" எனக்கு உருவாக்கித் தந்துவிட்டார். அவருக்கு நன்றி. 80-களில் நான் எழுதி, வெளியிடுவதற்காக 'மீரா' -வுக்கு மறந்து அனுப்பியுள்ளேன். அதை எப்படியோ வாழ்க்கை தரும் சோதனைக் களங்களைக் கடந்துவருகிற போராட்டத்தில் போயிருக்கிறேன். அத்தகைய நிலையில் ஒருநாள் அந்தப் பிரதி அச்சடிக்கப்பட்டுத் திருத்துவதற்காக என் முன்னால் வந்து நின்றால் எப்படி இருக்கும்? வியப்பும் வேட்கையும் ஆனந்தமும் மேலிடக் கதிரைத் தொடர்பு கொண்டால், "சிவகங்கையில் அப்பாவின் அலமாரியைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்; தற்செயலாக இந்தப் பிரதி கையில் கிடைத்தது; ஒரே அமர்வில் படிக்கும்படியாகச் செய்யவே, உடனே அச்சடித்து உங்கள் பார்வைக்கு அனுப்பி விட்டேன்'' என்கிறார். அன்றைய நாள் எனக்கு எப்படிக் கழிந்திருக்கும் பாருங்கள்? வாழ்க்கை எப்பொழுதும் ஆச்சரியங் களையும் அசாத்தியங்களையும் தனக்குள் வைத்திருக்கிறது; அந்தக் கவர்ச்சிதான் எத்தனை இடிபாடுகளுக்கும் இடர்ப்பாடுகளுக்கும் நடுவிலும் நம்மையும் வாழத் தூண்டும் “சக்திக் கிடங்காக” இருந்து வழிநடத்துகின்றது போலும்.