மானம் மானுடம் பெரியார்
₹285₹300 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. அறிவுக்கரசு
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :420
பதிப்பு :1
Published on :2017
Add to Cartஎன்
நீண்ட நாள் விருப்பம். தந்தை பெரியாரின் அறிவு எவ்வளவு அகலமாகவும்
ஆழமாகவும் பாய்ந்தது, பயன் விளைத்தது என்பதனை எழுத வேண்டும் என்று.
பெரியார் சிந்திக்காத துறையே இல்லை. கருத்து கூறாத கூறுகளும் இல்லை. அவரது
கருத்துகள் குறித்து பேசாத அறிஞர்களும் இல்லை .
அவர் படிப்பறிவு மிக்கவராக இருந்து இங்கிலீஷ் போன்ற மொழிகளில் பேசி, எழுதி இருந்திருப்பாரேயானால் பலராலும் போற்றப்பட்டிருப்பார். இந்நாட்டுப் பார்ப்பனர்க்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தினார் என்பதைக் கொண்டு, அவர்களின் கையில் இன்று வரையிலும் அகப்பட்டிருக்கும் பத்திரிகை உலகம் அவருக்குச் சேரவேண்டிய பெருமையைச் சேரவிடாமல் செய்து விட்டனர். இருட்டடிப்பு செய்து வந்தனர். என்றாலும் ரேடியம் போல அவரது கருத்துகள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் ஏதோ, வெறும் கடவுள் மறுப்பாளராகவும் பார்ப்பன வைரியாகவும் மட்டுமே கணிக்கப்படும் நிலை இருப்பதால் அவரது பன்முகத்தன்மை கவனிக்கப்படவில்லை. அவரது கருத்துகள் கொள்கைகள் களஞ்சியங்களாகத் தலைப்பு வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. அவை மிகுதியும் தமிழிலும் வெகு சிலவாகப் பிற மொழிகளிலும் உள்ளன. அவற்றைக் கொண்டே அவை ஆய்வுப்பொருள்களாகப் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருவது பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். அவ்வகையில் என் நூல் ஒரு சிறு துளி முயற்சி.