மனிதம் மலரட்டும்
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டேவிட் வில்சன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2008
Add to Cartதிருவள்ளுவர் வகுத்தளித்த வாழ்வியல் நெறிமுறை நூலான திருக்குறள் தமிழ் மக்களின் வேதநூலாக விளங்குகிறது.
அனைத்து அறநூல்களினின்றும் பிழிந்தெடுக்கப்பட்ட ஒப்பற்ற சிறந்த சாறு ஸ்ரீமத் பகவத் கீதை. கீதையை ஒருவன் நன்கு தெளி வாகப் புரிந்து கொள்வோனேயானால் அவனுக்கு எல்லா அற நூல் களின் அறிவும் தானே வந்தமையும், கங்கையில் நீராடுவதன் பயன் முக்தி என்கின்றன. கீதையாகிய கங்கையிலே மூழ்கி எழுபவன் தானும் முக்தியடைந்து, பிறரையும் முக்தி பெறவைக்கின்றான்.
இவ்வாறு மனித இனம் அன்பிலும் பண்பிலும் செம்மாந்த வாழ்வு வாழ வழிகாட்டிய உபதேசங்கள் அனைத்துமே மனித நேயத்தையே முதற் பொருளாகக் கொண்டுள்ளன.
இயந்திரமயமான இன்றைய மக்கள் வாழ்வு இனிப்பற்ற தேனாக, சுவையற்ற கனியாக, நலமற்ற மருந்தாக, சத்தற்ற உணவாக, மனித நேயமற்று இருப்பதால் என்ன பயன்?
மனிதனின் மனிதநேயம் உயிர்பெற வேண்டும் என்ற கருத்தை பேராசிரியர் டேவிட் வில்சன் அவர்கள் சுவைத்திருக்கும் பாங்கு பாராட்டிற்குரியது.
இவர் கங்கையிலே மூழ்கி புனிதமடைவதோடு மாண்படைய விரும்பும் அனைவரையும் அழைத்திருக்கும் பாங்கே பேராசிரியரின் மனிதநேயம் எனப் பாராட்டலாம்.