book

தமிழர் சமயம் எது?

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந.சி. கந்தையாப்பிள்ளை
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :196
பதிப்பு :1
Published on :2019
Out of Stock
Add to Alert List

இன்று பலவகை கிரியைகளோடும் ஆடம்பரங்களோடும் சமயம் என்னும் தலைப்பின் கீழ் நடைபெற்று வருவன சமய தொடர்பற்றன. அவை ஆதிகாலம் முதல் பழைய மந்திரவித்தைக்காரர், பூசாரிகளால் கையாளப்பட்ட சில பழக்கவழக்கங்களின் நிழல்கள். உண்மையான சமயம் என்பது உலகம், கடவுறள், உயிர் என்னும் முப்பொருள்களின் இயல்புகளை ஆராய்ந்து அரிவாள் உயர் வெய்வது. இன்று சைவ சித்தாந்தம் என்று வழங்கும் சமயக் கருத்துக்களே வரலாற்றுக் காலத்துக்கு முன் தொட்டுவரும் தமிழரின் மதக்கொள்கைகளாகும் என டாக்டர் போப்பையர் தமது திருவாசக மொழிபெயர்ப்பில் ஓரிடத்திற் கூறியுள்ளார். தமிழரின் உண்மையான சமயக்கொள்கை “ஞானத்தினால் வீடு” என்பதேயாகும். இன்று மக்கள் “மூடதனத்தினால் வீடு” என்று சொல்லும் படியாக உழன்று வருகின்றனர். கிரியைகள் புரிவதாலும், பொங்கல், படையல், பலிகள் இடுவதினாலும், குடைகள், ஆபரணங்கள், வாகனங்கள் முதலியவைகளைக் காணிக்கையாகக் கொடுப்பதினாலும், கொட்டு முழக்கு, ஆடல் பாடல் முதலிய ஆரவாரங்களோடு விழாக்கள் எடுப்பதினாலும் கடவுளை ஏமாற்றிவிட முடியாது. இவைகள் எல்லாம் மக்களை மேலும் மேலும் அறியாமையில் ஆழ்த்துவன. இவ்வியல்புகளை மக்கள் அறியாதிருக்கும்படி புரோகிதரும், பூசாரிகளும் விழிப்பாயிருந்து, அவர்களுக்கு நாளுக்கு நாள் அறியாமையை வளர்த்து வருகின்றனர். இவ்வறியாமை ஒழியும் பொருட்டும் சமயம் என்றால் என்ன என்பதை மக்கள் அறியும் பொருட்டும் இச்சிறு நூல் வெளியாகின்றது.