book

ஜெருசலேம் உலகத்தின் வரலாறு

Jerusalem Ulagathin Varalaaru

₹800
எழுத்தாளர் :ச. சரவணன், அனுராதா ரமேஷ், நடராஜன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :864
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789384915070
Out of Stock
Add to Alert List

ஜெருசலேம் ஒரு பிரபஞ்ச நகரம்; இருவேறு இனத்திற்குத் தலைநகர்; மூன்று மதங்களின் புனித பூமி. இறுதித் தீர்ப்புக்கான நிகழிடம். இன்றைய கலாச்சார மோதல்களின் போர்க்களம். எங்கோ இருக்கும் இந்தச் சிறிய நகரம் புனித நகரமானது எப்படி? உலகின் மையமாகக் கருதப்படுவது ஏன்? இன்று மத்திய கிழக்கின் அமைதிக்கான திறவுகோலானது எப்படி?
போர்கள், காதல் களியாட்டங்கள், மன்னர்கள், பேரரசிகள், தீர்க்கதரிசிகள், கவிஞர்கள், துறவிகள், வெற்றியாளர்கள் மற்றும் விலைமகளிர் ஆகியோரின் வியப்புமிகு செய்திகளின் ஊடே என்றென்றும் மாறிவரும் இந்த நகரின் கதையைப் புதிய ஆவணங்களின் வழியாகத் தனது வாழ்வை அர்ப்பணித்து எழுதியிருக்கிறார் மாண்ட்டிஃபையர்.

ஜெருசலேமை ஆக்கியவர்களும் அழித்தவர்களும் இந்த மன்னர்களும் வெற்றியாளர்களும் துறவிகளும் தீர்க்கதரிசிகளும் தான்; இவர்களே இந்த நகரின் வரலாற்றைப் பதிவு செய்தவர்கள்; இந்த நகர் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்களும் இவர்களே.
மன்னர் டேவிட்டிலிருந்து பராக் ஒபாமா வரையிலும், யூத கிறித்துவ இஸ்லாமிய மதங்களின் துவக்கத்திலிருந்து இன்றைய இஸ்ரேல்&பாலஸ்தீன பிரச்சனை வரையிலும் பேசுகிறது இந்த நூல்.

3000 ஆண்டு கால நம்பிக்கைகள், படுகொலைகள், மதவெறி, மத இணக்கம் ஆகிய எல்லாம் நிறைந்த ஒரு காவிய வரலாறு. இப்படித்தான் ஜெருசலேம் தன்னை ஜெருசலேமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. மண்ணிலும் விண்ணிலும் வாழும் ஒரே நகரம் ஜெருசலேம்.