book

கனவு மெய்ப்படும்

Kanavu Meippadum

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்ஸார்சி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :225
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

சமூகப் பிரச்சனைகளிலிருந்து சாதாரண மக்களை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல; கிராமப்புற வர்ணாச்ரம அடக்கு முறைகள் தொடர்ந்து உயிர்ப்போடு நிலவுகின்றன; மாற்றம் என்பது வெகு எளிதில் கிட்டி விடுவதில்லை; நிகழ் அரசியலில் அறம் நீங்கி தன்னிருப்பு மட்டுமே நிற்கின்ற அவலம் தொடர்கின்றது. இந்தச் சூழலில் புரட்சிகர மாற்றம் என்பது ஏமாற்றமே என்பதை இந்நாவல் மூலம் உணர்த்த விரும்புகிறேன். பிரதானமாய் இப்படைப்பு, கிராமப்புற தொன்ம வழிவந்த தொழிலாளர்களின் சோகம் பற்றிப் பேசுகிறது; முடிதிருத்தும் கலைஞனும், துணி வெளுக்கும் தொழிலாளியும் சந்திக்கின்ற மனித நேயமற்ற அன்றாட நிகழ்வுகளை முன்னிறுத்துகிறது. - எஸ்ஸார்சி