book

கல்லறை

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.எம். தீன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :246
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

சாலை ஓரங்களில் அல்லது போகிற பெருவழிப் பாதைகளில் காணப்படும் கல்லறைகளை நாம் கண்டு கவனித்து இருக்கிறோமா என்று கேட்டால் அவற்றை ஏன் பார்க்க வேண்டும் என்றே நம் மனம் கேட்கும். ஏனெனில் அவை மரணத்தின் வடிவங்களாக நம் மனதில் பதிந்து விட்டன. கல்லறைகள் நம் பார்வைக்கும் எண்ணங்களுக்கும் எதிராகிவிட்டன. ஒரு மனிதனின் மரணத்தில்தான் ஒரு கல்லறை பிறக்கிறது என்பது வாழ்வில் எத்தகைய முரண்! இந்த நாவல் நம்மை கல்லறைகளை நோக்கி அழைத்துச் சென்று ரசிக்க வைக்கிறது. 100 வருடங்களுக்கு மேலான கல்லறைகள், நாம் பாதுகாக்க வேண்டிய வரலாற்றுச் சின்னங்கள் என்று பேசுகிறது. அழிந்து போகும் கல்லறைகளை ஆதரித்து பாதுகாக்கக் குரல் கொடுக்கிறது. இந்த நாவலைப் படிக்கும் வாசகர்கள் ஒவ்வொருவரையும் கல்லறைகள் கைநீட்டி அழைக்கும். உங்கள் குரலும் அதற்கு ஆதரவாக ஒலிக்கும். எம்.எம்.தீன்