book

பிழையின்றித் தமிழ் எழுதுவோம்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.சி.ஸ்ரீதரன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :220
பதிப்பு :5
Published on :2018
Add to Cart

கோ. திருஞான சம்பந்தம் எனும் இயற்பெயர் கொண்ட இவர் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 28.11.1939இல் பிறந்தார். திருவாரூர் மேனிலைப் பள்ளியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் 1998 முதல்சென்னையில் வாழ்கிறார். 1968- இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக அரசின் தங்கப்பதக்கம் பெற்றவர். மலேசியா, உலகத் திருக்குறள் மாநாடு, புதுவை அரசு, பெங்களூர்த் தமிழ்ச்சங்கம், மதுரை எழுத்தாளர் மன்றம், உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் முதலிய அமைப்புகளில் கவிதைப் போட்டிகளில் முதல், இரண்டாம் பரிசுகள் பதினாறு பெற்றவர்.நற்றமிழ்ப் பாவலர், கவிக்கோ, நற்கவித் திலகம், தமிழ்ச்செம்மல், நற்றமிழறிஞர், பாரதி இலக்கியச் செல்வர், தமிழ்மாமணி, பேருரை நம்பி உள்ளிட்ட சிறப்புப் பட்டங்கள் பதினெட்டும் ஆழ்வார்கள் ஆய்வு மையம், கம்பன் கழகம், த.எ. சங்கம், கண்ண ப்பன் வாசுகி அறக்கட்டளை போன்ற அமைப்புகள் வழங்கிய விருதுகளும் பெற்றவர்.ஏடுகள், இதழ்கள் பலவற்றில் எழுதியும், வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்பல வழங்கியும், தனியுரை. தொடருரை, பேருரை என முழங்கியும், தில்லித் தமிழ்ச்சங்கம், கோலாலம்பூர்த் தமிழ்ச் சங்கம், மும்பை பாண்டூப் தமிழ்ச் சங்கம் முதலியவற்றில் சிறப்புரை யாற்றியும் பெருமை பெற்றவர்.மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் மூன்று முறை. தாய்லாந்தில் ஒருமுறை தமிழ்ப்பேருலா நிகழ்த்தியவர். ஏழு கவிதை நூல்கள் உள்ளிட்ட இருபத்து மூன்று நூல்கள் படைத்தும், நல்ல எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் பலரை உருவாக்கியும் ஐம்பத்தைந்து ஆண்டுகளாகத் தமிழ்ப்பணியாற்றி வருபவர்.