book

திருவிளையாடல்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரூரான்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :398
பதிப்பு :5
Published on :2016
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

திருமுறைப் பாடலால் பிறந்த கதை
சுந்தரமூர்த்தி நாயனார் தில்லையில் அருளிய திருக்கோயில் திருப்பதிகத்தின் வாயிலாக, கீழைச் சிதம்பரம் எனும் தில்லைக்கும் மேலைச் சிதம்பரம் எனப்படும் திருப்பேரூருக்கும் இடையே உள்ள தொடர்பு திருப்பேரூர்ப் புராணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேவாரம் அருளிய மூவரில் நம்பியாரூரர் ஒருவரே மீகொங்கு எனப்படும் கொங்கு நாட்டின் மேற்குப் பகுதிக்கும் வருகை புரிந்தவர். (இராசகேசரிப் பெருவழி இது பேரூரை ஒட்டி கொங்கு நாட்டில் இருந்து சேரநாட்டுக்குச் செல்லும் பாலக்காட்டுக் கணவாயை ஒட்டியது. இப்பொழுது அமைந்துள்ள கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை திப்புசுல்தான் காலத்தில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. காடும் மலையும் செறிந்த மேல்கொங்கு நாட்டில் சைவத்தை அறிமுகப்படுத்தியவர் சுந்தரமூர்த்தி நாயனாரே எனலாம். எனவே, அவரைப் பற்றிய பல செய்திகள் கொங்கு நாட்டுத் தலபுராணங்களில் கிடைக்கின்றன.