book

கம்பன் புதிய பார்வை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

₹285₹300 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.ச. ஞானசம்பந்தன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :316
பதிப்பு :1
Published on :2020
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
Add to Cart

தமிழின் அழகுக்கு அழகு சேர்ப்பது கம்பராமாயணம். அதன் கவிதையழகு, கருத்தழகு, நடையழகு, தொடையழகு, அணியழகு,யாப்பழகு, கற்பனையழகு என எல்லா நிலையிலும் வளமையும் இளமையும், வானையும் அழகுப்படுத்தும் வண்ணம் வீறுகொண்டு நடக்கிறது. அதற்கென அமைந்த ஆய்வு நூல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.கம்பன் ஆய்வடங்கல் எனத்தனிநூலும் எழுந்துள்ளது. தமிழில் அதிகமான திறனாய்வு நூல்களைப் பெற்றதும் கம்பராமாயணமே.அதனைப்பல்வேறுகோணத்திலும் பளபளக்கும் வைரமெனப்பட்டை தீட்டப்பெற்றுள்ளது. அந்த வகையில் எழுந்த ஒரு நூலே "கம்பன் புதிய பார்வை” என்னும் இந்த நூல். பொதுவாகத் தமிழ் இலக்கியங்களில் அரசியல் குறித்த ரகசியமாக உரைப்பது மக்கள் உடல் மன்னன் உயிர். என்னும் மாண்பு. ஆனால் கம்பன் கண்ட புதுமை யாதெனில் மக்கள் உயிர் மன்னன் உடல் என்னும் உயர்ந்த புதிய வார்ப்பு. இப்படி எத்தனையோ புதுமைகளை கம்பனில் காணலாம். கம்பன் குறித்த பத்துக் கட்டுரைகளின் தொகுப்பே 'கம்பன் புதிய பார்வை' என்னும் இந்த நூல். விழுமம் நிறைந்த எழுச்சி நூல். கம்பனுக்குக் கிடைத்த கொம்பு நூலே எனலாம். அதுகபாறும் வெளிப்படுத்தப்படாத பல புதிய புதையல்கள் கம்பன் காப்பியத்திலிருந்து வெளிச்சத்துக்குக்கொண்டுவரப்பெற்றுள்ளது. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்வரிசையில் இடம்பெற்றுள்ளது.
நாட்டுடைமையாக்கப்பட்ட நல்லறிஞர் நூல்வரிசையில் இந்த அரிய நூலை எமது பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். வாசக அன்பர்கள் வாங்கிப் படித்துப் பயனடைவார்கள் என நம்புகிறோம்.