book

தமிழ்ச் சிறுகதைகளும் மனிதப் பெருவெளியும்

Tamilch Chirukathaigalum Manithap Peruveliyum

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் க. பஞ்சாங்கம்
பதிப்பகம் :பரிசல் புத்தக நிலையம்
Publisher :Parisal Puthaga Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788194400868
Add to Cart

சிறுபத்திரிகைச் சூழலிலும் கல்வியாளர்கள் நடுவிலும் உடனுக்குடன் என்று இல்லாவிட்டாலும் காலம் தாழ்த்தியாவது, விமர்சனங்களும் ஆராய்ச்சிகளும் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தேடி ஒருங்கிணைத்து வாசிக்கிற ஒரு பழக்கமுறைதான் இங்கே பற்றாக்குறையாக இருக்கிறது; சிறுபத்திரிக்கை என்றால் அது குழுவாதமாகச் சுருங்கிக் கிடக்கிறது; கல்வியாளர்கள் எழுத்து என்றால் அது ஞானமற்றதாகவும் பொருட்படுத்தக்கூடிய தரம் அற்றதாகவும் தாழ்ந்து கிடக்கிறதென்று ஒரேயடியாகக் கண்ணெடுத்துப் பார்க்கவும் தயங்குகிற பல படைப்பாளிகளையும் வாசகர்களையும் நான் பார்த்திருக்கிறேன். இதில் ஓரளவு உண்மை இருக்கிறது என்றாலும் இவற்றையும் தாண்டி, ஒரு படைப்பு வருகிறதென்றால் அதற்கான எதிர்வினைகளை ஆவணப்படுத்திப் பார்க்கிற ஒரு முறைமை இங்கே இன்றுவரை கடைப்பிடிக்கப்படவில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி ஆவணப்படுத்திப் பார்க்கிற ஒரு மரபு இருந்திருக்குமானால் தெரிந்திருக்கும் படைப்புக்களை விடப் படைப்பைக் குறித்த புத்தகங்கள் எவ்வளவு அதிகமாக வந்திருக்கின்றன என்ற உண்மையையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.