ஸ்ரீ இராமானுஜர் வாழ்வும் வாக்கும்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. சீதாராமன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789386209139
Add to Cart உலக மக்கள் அமைதியுடனும், இன்பமுடனும் வாழவே விரும்புகின்றனர். இவ்வாறு வாழ மக்களுக்கு உறுதுணையாவது சமய நெறியே. எனவே, சமயச் சான்றோர்களால்தான் மக்களுக்கு நல்வழி காட்ட முடியும் என்க. உலகிற்கே வழிகாட்டியாக விளங்கிய சமயச் சான்றோர்கள் முக்கடல் சூழ்ந்த நமது தென்னகத்தில்தான் அவதரித்துள்ளனர். ஆதிசங்கரர், இராமாநுசர், மத்துவர் ஆகிய முனிவர் பெருமக்கள் ஒப்பற்ற சமய ஆச்சார்யராவர். இச்சமயச் சான்றோர்களை உலகுக்களித்த பெருமை நம் தென்னாட்டிற்கே உண்டு. ஸ்ரீ சங்காச்சார்யார், ஸ்ரீமத்துவாச்சார்யர்கட்குத் தன்னைப் பாலமாகக் கொண்டு ஸ்ரீராமாநுஜர் வைணவ நெறியை வகுத்துத் தந்து உலகை உய்வித்தார்.