book

உங்கள் குழந்தைகள் (வரும் தலைமுறையின் சுதந்திரத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் துணை நிற்பது)

₹360+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :370
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788184028683
Out of Stock
Add to Alert List

ஆரம்பத்தில் குழந்தை அழ விரும்பும். இந்த அழுகை அவனுக்கு ஆழமான தேவையாகும். அழுகையின் வாயிலாக ஒவ்வொரு நாளும் அவன் உணர்வுகளை வெளியே வீசுகிறான். குழந்தைக்குப் பலவிதமான ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன. அது அப்படித்தான் இருந்தாக வேண்டும். அது தேவையுமாகும். குழந்தைக்கு ஏதோ தேவைப்படுகிறது. ஆனால், தனக்கு என்ன தேவை என்பதை அதனால் கூற இயலாது. அதை வெளிப்படுத்த அவனால் முடியாது. குழந்தை ஏதோ கேட்கிறது. ஆனால், அதைக் கொடுக்க முடியாத நிலையில் அதன் பெற்றோர்கள் இருக்கிறார்கள். தாய் அங்கு இல்லாமல் இருக்கலாம். அவள் வேறு ஏதோ வேலையில் இருந்திருக்கலாம். அவளால் குழந்தையைக் கவனிக்க முடியாமல் இருந்திருக்கலாம். அந்தக் கணத்தில் அவனுக்கு கவனம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, அவன் அழத் துவங்குகிறான். தாய் அவனுக்கு பொம்மையைக் கொடுக்கிறாள். பால் கொடுக்கிறாள். அவனைச் சமாளிக்க, சமாதானப்படுத்த எதையாவது செய்கிறாள். ஏனெனில், அவன் அழக்கூடாது. ஆனால், அழுகை மிகவும் அவசியமான ஒன்றாகும். அவன் அழுதால் அவனை அழ விட்டுவிட வேண்டும். அழுதபின் அவன் புத்துணர்வுடன் இருப்பான் . அந்த ஏமாற்றம் அழுகையின் மூலம் வெளியே வீசப்பட்டுவிட்டது. அழுகையை நிறுத்திவிட்டால் ஏமாற்றமும் உள்ளேயே நின்றுவிடும். அவன் அதன்மீது மற்றவைகளை இட்டு நிரப்புவான். அழுகையும் உள்ளே அதிகரித்துக்கொண்டே போகும். - ஓஷோ