book

உங்களை வடிவமைக்கும் புதிய ரசவாதம்

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :389
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788184028942
Add to Cart

இந்த நச்சு வளையத்தில் இருந்து நீங்கள் வெளியே வருவதற்குப் பெயர்தான் துணிச்சல் ஆகும். கடந்த காலத்துடனான தொடர்பை உடைத்தெறிய பதிதாக மறுபிறவியெடுக்க முயலும் செயலில் இறங்குவதற்குப் பெயர்தான் துணிச்சல் ஆகும். மறுபிறப்பு என்ற நிகழ்வை ஏற்படுத்தவே இந்தத் தியான முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் நிறைய வலிகளும், வேதனைகளும் இருக்கவே செய்யும் காரணம், ஒவ்வொரு பிறப்பு என்பதும் வேதனை நிறைந்த ஒன்றுதான். அதற்கு நீங்கள் தயாராகும்போது, அந்த வலியும் ஆனந்தமான ஒன்றாக மாறிவிடும். இரவு கருமை நிறைந்து காணப்பட்டால், அதிகாலை நேரம் வெளிச்சமற்று மங்கிப் போயிருந்தால், சூரிய உதயம் அருகில் இருக்கிறது என்று பொருள். உங்கள் துயரம் இன்ப உச்சமாக மாறிவிடும். மகிழ்ச்சியும், பேரின்பமும் எங்கே பரிணமிக்கின்றனவோ, அந்த எல்லையின் அருகில் நீங்கள் சென்றுவிட்டதாக அர்த்தம். நீங்கள் துயரப் பகுதிகளுக்குள் புகுந்து அதைக் கடந்து செல்ல ஆயத்தப்படுங்கள். துன்பத்தினூடே நீங்கள் பயணம் செய்திட ஆயத்தமாக இல்லாது போனால், ஒருபோதும் அதைக் கடந்து சென்றிட இயலாது துன்பங்களை உள்ளேயே அடக்கி வைத்திருக்க வேண்டாம். அதற்குப் பதிலாக அவற்றின் உள்ளே புகுந்து புறப்பட்டு அப்பால் சென்று விடுங்கள்.