
காமராஜர் வரலாறு (கலியுகத்தின் காவியத் தலைவன்) விருட்சத்தின் விதையாக P/B
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.பி. கணேசன்
பதிப்பகம் :தாய் பதிப்பகம்
Publisher :Taai Pathippagam
புத்தக வகை :
பக்கங்கள் :372
பதிப்பு :1
Published on :2023
Add to Cart"இன்றைய மாணவர் நாளைய தலைவர்" என்ற வரிகளுக்கு ஏற்ப, வாழ்ந்து காட்டிய நல்ல தலைவர்கள் யார் என்பதை அறிந்து அவரை வழிகாட்டியாக, முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும். அதற்கென்றே எழுதப்பட்ட நூல் "காமராஜ் வரலாறு" கலியுகத்தின் காவியத் தலைவன் (விருட்சத்தின் விதையாக) காமராஜ் மீது அளவற்ற மதிப்பும், மரியாதையும், அவர் செயல்பாடுகளில் வியப்பும், ஆட்சியியல் திறத்தில் மலைப்பும் கொண்ட; "காமராஜ் விழிப்புணர்வு மையம்", 'காமராஜ் காட்சியகம்' இவற்றை உருவாக்கியவரான திரு.S.P. கணேசன் உருவாக்கியுள்ள நூல் இது.
"பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்" என்பதற்கேற்ப நல்ல பண்புகள் விளையும் பயிராகத் திகழும் பருவத்தில் மனநிலத்தில் விதைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஒரு பெருந்தலைவரின், மனிதரில் "புனிதரின் வரலாறு" என அமைந்துள்ள நூல் இது.
