
காமராஜர் வரலாறு (கலியுகத்தின் காவியத் தலைவன்) H/B
₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.பி. கணேசன்
பதிப்பகம் :காமராஜர் விழிப்புணர்வு மையம்
Publisher :kamarajar vizhippunarvu maiyam
புத்தக வகை :
பக்கங்கள் :992
பதிப்பு :3
Published on :2022
ISBN :9788194165408
Add to Cart"உயரத்தை எட்டுவதை விட உயரத்தில் இருப்பதே கடினமானது. சாதனைப் படிகளில் ஏறுவதற்கு பொறுமையும் உழைப்பும் தேவைப்படுகிறது". என்று இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆர். பாலகிருஷ்ணன் ஒரு நூலில் குறிப்பிட்டுள்ளார். பொறுமை, உழைப்புக்கு இன்றும் சான்றாகக் கூறப்படுபவர் தென்னாட்டுக் காந்தி என்று புகழப்படும் கு. காமராஜ் அவர்கள். இவர் போல் ஒருவர் இவருக்கு முன்னும் இல்லை, பின்னும் இல்லை என்று கூறப்படும் அளவிற்கு நேர்மை, எளிமை முதலிய பண்புகளின் குறியீடாகத் திகழ்ந்தவர் திரு.கு. காமராஜ். இந்தியாவின் தென் கோடியில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து அகில இந்திய அரசியலில் "முடிவெடுக்கும் சக்தியாக" பிரம்மாண்டமாக வளர்ந்தவர் அவர்!
திரு. காமராஜ் அவர்களின் வரலாற்றை "காமராஜ் வரலாறு (கலியுகத்தின் காவியத் தலைவன்)" என்ற பொருளில் மிக விரிவாக திரு.கணேசன் அவர்கள் எழுதித் தந்திருக்கிறார். காமராஜ் அவர்களைக் குறித்துப் பற்பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. எனினும் இந்நூல் தனித்துவம் மிக்கதாக நான் உணர்கிறேன். காமராஜ் அவர்களின் பிறந்த ஊரான விருதுநகரில் வாழும் ஒருவர், முயன்று திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்நூலை எழுதியுள்ளார்.
