
கலைஞரின் கருத்தோவியங்கள்
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் நா. ஞானசேகரன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :134
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788196887490
Add to Cartதமிழ்ச் சமுதாயம் தமிழின் மூலமே வளர்ச்சியடைய முடியும் என்ற நோக்கத்தில்,தமிழ் உணர்வைத் தனது எழுத்தாலும், பேச்சாலும் வளர்த்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். நல்ல தமிழ்ச் சொற்களைத் தம் எழுத்திலும், மேடைப் பேச்சிலும் பயன்படுத்தியதன்மூலம் எட்டு கோடி தமிழர்களின் உள்ளங்களில் நிலைத்து மிகுந்த புகழோடு வாழ்ந்து வருபவர் டாக்டர் கலைஞர். தமிழ்ப் புலவர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் சிலைகள் வைத்து, திருவள்ளுவரின் புகழ் பரவ கோட்டம் அமைத்து, தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரம் தமிழர்களின் மாநாடு கூட்டி சாதனைகள் பல புரிந்தவர் கலைஞர்.
தமிழ் இன,மொழி, பண்பாட்டு உணர்வு தமிழ்நாட்டில் என்றென்றும் வளரவேண்டும் என்ற நோக்கில் கலைஞர் எழுதிக் குவித்த நூல்கள் ஏராளம். அவற்றுள் பொதிந்துள்ள கருத்துக் குவியல்களைத் தொகுத்து முனைவர் நா.ஞானசேகரன் 'கலைஞரின் கருத்தோவியங்கள்' என்ற இந்நூலினைப் படைத்துள்ளார். கலைஞரின் கருத்துகளும், கவிதைகளும், குறளோவியங்களும், திரைப்பட வசனங்களும் இந்நூலில் அணிவகுத்து பவனி வருகின்றன.
தமிழ்ச்சமுதாயம் வளர்ச்சி அடைய, தமிழ்ச் சமுதாயம் விழிப்புணர்வுபெற தேவையான கலைஞரின் சமுதாயக் கருத்து களையும், குறிக்கோள்களையும், கொள்கைகளையும் பரவலாக எடுத்துரைக்கின்ற இந்நூலினைத் தமிழ் ஆர்வலர்களும், தமிழியல் ஆய்வாளர்களும் படித்துப் பயன்பெற வேண்டுகின்றோம்.
