book

சோழேந்திர சிம்மன் இராஜேந்திர சோழன்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உளிமகிழ் ராஜ்கமல்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :183
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

தமிழ் இலக்கிய வரலாற்றில் மதிப்பிற்குரிய ஓர் இடத்தைப் பெற்றிருப்பது நாவல். இதனை வரலாற்று நாவல் என்றும் சமூகநாவல் என்றும்: வட்டார நாவல்; அறிவியல் நாவல், நகைச் சுவை நாவல் என்றும் பல நிலைகளில் பேசப்பட்டாலும் வரலாற்று நாவல்கள் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன எனலாம். அவை வரலாற்றில் காணப்படும், வரலாற்று இடைவெளியை நிரப்புவனவாகவும் வரலாற்றுத் தொடர்ச்சியினை அறிந்து கொள்ளும் வகையினவாகவும் அந்தக்கால மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு பழக்கவழக்கங்கள், ஆட்சிமுறை இவற்றை அறிந்து கொள்ளும் நிலையினவாகவும் அறியப்படுகின்றன.
கி.பி.919 இல் பாண்டியன் இராஜ சிம்மனால் ஈழத்தரசனிடம் கொடுத்து வைக்கப்பட்ட சுந்தர மணிமுடியையும் இந்திர ஆரத்தையும் கி.பி.1017 ல் மீட்டுவந்த இராஜேந்திர சோழனின் வெற்றிச் சிறப்பைப் பேசுகின்ற வரலாற்று நாவலே ''சோழேந்திர சிம்மன் இராஜேந்திர சோழன்” என்னும் இந்த நாவல்.
இந்தச் சிறந்த வரலாற்று நாவலைப் பழகிய கைவண்ணமும் பண்பாட்டு நிறைகுணமும் உடைய ஆசிரியர் உளிமகிழ் ராஜ்கமல் என்பவர் வரலாற்று உணர்வும் இலக்கியப் புலமையும் கல்வெட்டாய்வு நுட்பமும் வெளிப்பட எழுதியுள்ளார். அவருடைய போற்றத்தகும் வரலாற்றுணர்வினை இந்த வரலாற்று நாவலில் கண்டுமகிழலாம்.