மூவிரண்டு ஏழு
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி. ரங்கராஜன்
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :3
Add to Cartசேது! பத்து வயது சிறுவனாக இருந்த போது அவன் தந்தைக்கு, அவன் கண் முன்னாலேயே நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதைக் கண்டு திக்பிரமடைந்து நின்று விடுகிறான். கொலைகாரனின் மகன் என்று தன்னையும், கொலைகாரனின் மனைவி என்று தன் தாயையும் பழித்து இழித்து ஒதுக்கிய உற்றார், உறவினர்களிடமிருந்து பிரிந்து, வளர்ந்து, படித்து, பட்டதாராயாகி ஐந்து நட்சத்திர ஓட்டலான ஓட்டல் உமா'வின் மானேஜராகவும் வளர்ந்து விடுகிறான். ஓட்டல் தொழிலில் சேதுவுக்குள்ள நுண் அறிவையும், நன்முயற்சியையும், அவன் முதலாளிக்கு எவ்வளவு விசுவாசமாக பாடுபடுகிறான் என்பதையும் கண்டு, அவனை வேறு சில பிரபல ஓட்டல் முதலாளிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் ஓட்டலுக்கு இழுத்துக் கொள்ள வலை வீசுகிறார்கள். அந்த வலையில் அவன் மாட்டிக் கொள்ள இருந்த நேரத்தில் அவன் காதலி கிருத்திகாவும் ,ஓட்டல் உமா'வின் தொழிலாளர்களும் சேர்ந்து எப்படி அவனை மீட்டு வருகிறார்கள் என்பது நாவலின் உச்சகட்ட காட்சி.