book

வெள்ளித்திரை தந்த வித்தகர்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்திகேயன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395523837
Add to Cart

புராண இதிகாச கதைகளில் பயணித்த தமிழ் திரையுலகை  பகுத்தறிவு சார்ந்த சமூகக் கதைகளை கொண்ட திரை உலகமாக மாற்றிய பெருமை திராவிட பாரம்பரிய எழுத்தாளர்கள் அத்தனைபேருக்குமுண்டு. ஆனாலும் அதில் முதன்மை இடத்தில் பேரறிஞர் அண்ணாவும் இரண்டாமிடத்திலே கலைஞரவர்களும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து உள்ளனர் என்பதுதான் உண்மை. கலைஞர் அவர்கள் அண்ணனுக்கு தம்பியாக இருந்தாலும் அண்ணாவுக்கு முன்னரே திரையுலகில்  நுழைந்து பல திரைப்படங்களில் சமூகப் பொறுப்புள்ள வசனங்கள் எழுதியதில் அவர் பங்கு மகத்தானது. அக்காலத்தில் திரைக்கு நடிக்க வர நினைக்கிற நடிகர்கள் அத்தனை பேரும் நான் மனோகரா வசனம்  போல் அழகாக பேசுவேன் எனக்கு நடிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று  கேட்பார்கள். அப்படி திரைத்துறை  நுழைவுக்கு நடிகர்களுக்கு ஒரு இலக்கணமாக இருந்தது கலைஞர் அவர்களின் வசனம் என்று சொன்னால் அதுமிகையாகாது. அத்தகைய கலைஞரவர்களின் திரைத்துறை பயணத்தில் நடந்த பல சுவையான சம்பவங்களை சொல்லுவதுதான் வெள்ளித்திரை தந்த வித்தகர் என்ற இந்த நூல். இதை எழுதுவதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்த கௌரா புத்தக குழுமத்திற்கு  எனதுமனமார்ந்த நன்றி.