புதுமைப்பித்தன் வரலாறு
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தொ.மு.சி. ரகுநாதன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :214
பதிப்பு :1
Published on :2014
Add to Cartபுதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்றப்பட்டவர். சிறுகதை உலகில் சாதனை புரிந்த புதுமைப் பித்தன், உரைநடையிலும் சாதனை புரிந்துள்ளார். சாதாரணச் சொற்களுக்குத் தனி அழகும் புதுமையும் கம்பீரமும் தரக்கூடிய ஆற்றல் இவரது நடைக்கு இருந்தது. இவர் இதுவரை எழுதி வந்த அத்தனை பேரிலும், ஒரு வித்தியாசமான எழுத்து நடையைக் கையாண்டுள்ளார்.
புதுமைப்பித்தன், தன்நடையைப் பற்றித் தானே கூறும்போது, ''கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு, வார்த்தைகளை வெறும் தொடர்புச் சாதனமாக மட்டும் கொண்டு, தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக் கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது” என்பார்.
திருநெல்வேலி வட்டார வழக்குகள் அவரது உரைநடையில் பரவலாக இருக்கும். ஆங்கிலச் சொற்களையும் ஆங்கில வாக்கிய அமைப்புகளையும் ஆங்காங்கே பயன்படுத்தியுள்ளார்