book

ஶ்ரீ பகவத் இராமானுசர் அருளிச் செய்த ஶ்ரீபாஷ்யம்

Sri Bagavath Ramanusar Arulisseytha Sripasyam

₹950
எழுத்தாளர் :க. ஶ்ரீதரன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :1048
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388428422
Add to Cart

இராமானுசர் (1017-1137) கி.பி. 1017 ஆம் ஆண்டு சித்திரை மாதம், வளர்பிறை பஞ்சமி திதி, திருவாதிரை நாளில், வியாழக்கிழமை (04-04-1017) அன்று ஸ்ரீபெரும்புதூரில் கேசவ சோமையாஜி, காந்திமதி தம்பதியருக்கு மகனாக அவதரித்தார். இராமனுசருக்கு யதிராசர் என்ற பெயருமுண்டு. யதி என்ற சொல் துறவி என்று பொருளுடையது. ராசர் எனில் அரசன். யதிராசர் எனில் துறவிகளில் தலைமைப் பண்புடையவர் என்பது பொருள். ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் தாயாருக்கு யதிராசவல்லித் தாயார் என்ற பெயர் வைணவ மகானான இராமனுசரின் பெயரை ஒட்டி அமைந்துள்ளது வியப்பானது. விசிட்டாத்துவைதம் என்ற தத்துவ இயலை உலகம் முழுதும் பரப்பிய வைணவப் புரட்சித் துறவி இவர். இராமானுசர் பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் புகழ் பெற்ற உரையை இயற்றியதால் இவரை பாஷ்யக்காரர் என்றும் அழைக்கிறார்கள்.