book

அருட்செல்வர் ஏ.பி.என்.

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்திகேயன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :202
பதிப்பு :1
Add to Cart

அவரது திரைப்படங்களில் எப்போதும் அடிப்படையில் ஒரு நல்ல கதை இருக்கும். அந்த அடிப்படையிலேயே அவர் செயல்பட்டார். அதனால்தான் பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுத்த அவரது திரைப்படம் வெற்றி பெற்றது போலவே அவர் சின்ன நட்சத்திரங்களை வைத்து எடுத்த திரைப்படங்களும் சிறப்பான வெற்றியை பெற்றது எனலாம். அதற்கு உதாரணம். ஒரு எட்டு வயதுப் பையன் மாஸ்டர் பிரபாகரை கதாநாயகனாக வைத்து அவர் தயாரித்த 'வா ராஜா வா' திரைப்படத்தைச் சொல்லலாம்.  சமூகப்படம், சமூகசீர்திருத்தப் படம் என்று பயணித்துக் கொண்டிருந்த தமிழ் திரைப்பட உலகைப் புராணக்கதைகளை நோக்கி மடைமாற்றம் செய்து திசை திருப்பியவர், தனது 'திருவிளையாடல்' திரைப்படத்தின் மூலம் புராணப்படங்களுக்கு புதிய பாதையைத் திறந்து விட்டவர். அப்பாதையை அவரது தமிழ் மணம் கமழும் வசனங்களால் மணம் பெறச் செய்தவர். புராணப்படங்களை இயக்குவதில் வல்லவராகி 'அருட்செல்வர்' என்ற சிறப்புப் பெயரையும் பெற்றவர். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கு அவரே சான்று. திறமை, கடினமான உழைப்பு, இடைவிடாத முயற்சி, எளிமை, நேர்மை, என்பவற்றிற்கும் அவரையே உதாரணமாக ஏன் இலக்கணமாகக் கூடச் சொல்லலாம். எனவே இந்தப் பதிவை நான் அவர் மீது கொண்ட இதயப்பூர்வமான அன்பின் வெளிப்பாடாகவே கருதுகிறேன். இந்தப் பதிவில் நான் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதனை தெரிவிக்க வேண்டியவர்கள் இதனைப் படிக்கும் வாசக நண்பர்களே, இதில் குறை இருந்தால் சுட்டிக்காட்டவும், நிறை இருந்தால் பாராட்டவும் செய்யலாம்...

 முதலில் இந்த நூலைக் கொஞ்சம் சிறியதாகவே எழுதினேன். இப்புத்தகத்துக்கு வாழ்த்துரை வழங்கும் பொருட்டு  நடிகர் திரு சிவகுமார் அவர்களைச் சந்தித்தேன். அவர் தனது பல்வேறு பணிகளுக்கு மத்தியில் எனது நூலைப் படித்திருக்கிறார். படித்தவருக்கு எனது நூலில் நான் எழுதிய பதிவுகள் அவருக்கு மிகவும் பிடித்திருக்கவே இதனை இன்னும் கொஞ்சம் விரிவான பதிவாகவே எழுதலாமே என்றார். அதற்காக நான் உங்களுக்கு ஏ.பி.என் அவர்களுடன் திரைத்துறையில் தொடர்புடைய அவருடைய உதவி இயக்குனரும் அவரது நிழல் போன்ற திரு எஸ்.ஆர்.தசரதன் அவர்களையும், மாஸ்டர் பிரபாகர், திருமதி குட்டி.பத்மினி, ஏ.பி.என். அவர்களின் அண்ணன் மகனும் அவரது திரைப்பட நிறுவனத்தின் நிர்வாக மேலாளராக பணிபுரிந்த திரு.முருகு எனப் பலரையும் அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன் இயக்குனரும் திரைப்பட தயாரிப்பாளரும் நல்ல நடிகருமான திரு.கலைஞானம், ஏ.பி.என்.அவர்களின் அருந்தவப்புதல்வி திருமதி.விஜயலெட்சுமியையும் அவரது புதல்வர் திரு.பரமசிவம் அவர்களையும் எனக்கு அறிமுகம் செய்தார். எனவேதான் இந்த நூல் ஒரு புதுப்பொலிவு பெற்றது என்றால் அது மிகையாகாது. அதற்கு திரு.சிவகுமார் அவர்கள் இயக்குனர் ஏ.பி.என்.அவர்கள் மீது கொண்ட அளவிடற்கரிய அன்பே அடிப்படை என்று சொல்லலாம். எனவே இந்த நூல் செழுமைப்பட, சிறப்படைய, பொலிவுபெற உதவிய திரு.சிவகுமார் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த, இதயம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.