book

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 3

₹650
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :592
பதிப்பு :2
Published on :2011
ISBN :9788184026528
Add to Cart

உண்மையான உந்துதல் இருக்கும்போது மட்டுமே செய்.
2) நிறுத்துவதைப் பற்றி யோசிக்காதே. வெறுமனே நிறுத்து!
3) காத்திரு! நீ நிறுத்திய நிலையில் மூச்சு இல்லை. அசைவு இல்லை -- காத்திரு. என்ன நடக்கிறது என்று பார். எந்த முயற்சியும் செய்யாதே. நான் காத்திரு என்று சொல்வதன் அர்த்தம், மையத்தைப் பற்றி இப்பொழுது யோசிக்க ஆரம்பிக்காதே என்பதே. அப்படி செய்வதால் மறுபடியும் தவற விடுவாய். சுயம், ஆத்மா பற்றி எல்லாம் யோசிக்காதே. ஒரு தரிசனம் வருகிறது. .ஒரு தரிசனம் இங்கு கிடைக்கிறது என்று நினைக்காதே. எதுவும் யோசிக்காமல் வெறுமனே காத்திரு. உந்துதல், சக்தி அதுவாகவே நகரட்டும். நீ பிரம்மா, ஆத்மா, மையம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தால் சக்தி இந்த யோசனைக்குள் போய் விடும்.
நீ இந்த உள் சக்தியை மிக எளிதில் வீணாக்கி விடலாம். ஒரு நிணைப்பு கூட அதன் திசையை மாற்றி விட்டு விடும். அதன்பின் நீ யோசனையில் மூழ்கி விடுவாய். நான் நிறுத்து! என்று சொல்வதன் அர்த்தம் முழுமையாக முற்றிலுமாக நிறுத்துதல். எதுவும் அசைவதில்லை. காலமே நின்றுவிட்டது போன்ற நிலை! எந்த அசைவும் அங்கு இல்லை. வெறுமனே நீ இருக்கிறாய்! அந்த எளிய இருப்பில் திடீரென மையம் வெடிக்கிறது...!