book

உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 1

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :6
Published on :2006
Out of Stock
Add to Alert List

உணர்ச்சிகளை வெளிக்காட்டுபவன் உள்ளத்திலே ஏதோ ஒன்று குறைவாய் இருப்பதாக உணர்கிறான். என்னதான் சக்தி பெற்றவனாக அவன் விளங்கினாலும், அவன் உள்ளத்தின் ஆழத்திலே வலிமை இழந்தவனாக உணர்வான். புற வாழ்க்கையிலே என்னதான் சொத்துக்களை சேகரித்து வைத்திருந்தாலும், அவன் உள்ளுக்குள் ஒரு ஏழையாகவே காட்சியளிப்பான். வெளி உலகிலே அவன் என்னதான் வெற்றிமேல் வெற்றி அடைந்திருந்தாலும், உள்ளத்தின் ஆழத்தில் தோல்வியின் அறிகுறிதான் மேலோங்கி நிற்கும். இரு முனையிலே ஒரு முனையை மட்டுமே பற்றிப் பிடித்திருப்பவனின் நிலை சீர்குலையத்தான் செய்யும். அதற்கு நேர்மாறாக கவிஞனாயிருப்பவன், ஞானத்தில் மூழ்கி, தியானத்தில் சஞ்சரிப்பவன், தனக்குள்ளேதான் நிலைத்திருப்பான். வெளி உலகமும் வெகு அழகுதான். மலர்கள் மலர்கின்றன. நட்சத்திரங்களும் சூரியனும் வானத்தில் வலம் வருகின்றன. முழுப் பிரபஞ்சத்தையும் அவன் ஒதுக்கித் தள்ளுவதால் அவன் ஒரு ஏழையாகவே காட்சி தருகிறான். எல்லைகளைத் தூக்கி எறி, உள்ளே வெளியே ‌என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி விடாதே. புற உலகியலிலும் அகத் தனிமையிலும் சிக்கி, சீரழிந்து விடாதே.