ஜேம்ஸ் பாண்ட் 007 அசத்தும் டாக்டர் நோ
₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகிலன் கபிலன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :432
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184026719
Add to Cartஇயான் தனது அனைத்துப் படைப்புகளுக்கும் ஒரு மையக் கதாபாத்திரம் வேண்டும் என்பதற்காக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினார். பாண்ட் ஒரு கப்பற்படை ஆணையர். மேலும் இவர் எம்.ஐ6 எனப்படும் பிரிட்டிஷ் இரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது தான் சந்தித்த பல கப்பற்படைத் தளபதிகளை அடிப்படையாகக் கொண்டு இக்கதாபாத்திரத்தை இவான் உருவாக்கினார். இவான் ஜேம்ஸ்பாண்டின் கதாபாத்திரத்தைப் பற்றி குறிப்பிடும் போது 'நான் இரண்டாம் உலகப்போரில் சந்தித்த அனைத்துத் தளபதிகள் மற்றும் ஆணையர்களின் கலவையே ஜேம்ஸ்பாண்டின் கதாபாத்திரம்' எனக் குறிப்பிடுகின்றார். நார்வேயிலும் கிரீஸிலும் இரண்டாம் உலகப் போரின் போது ரகசிய உளவாளியாக வேலைப் பார்த்த தனது அண்ணன் பீட்டரை வைத்தும், அண்ணன் நண்பர்களின் நடவடிக்கைகளை வைத்தும் ஜேம்ஸ் பாண்டின் செயல்பாடுகளையும், உடை அலங்காரங்களையும் இவான் உருவாக்கியுள்ளார். கதாபாத்திரத்திற்கு உண்டான பெயரை அமெரிக்க பறவைகள் வல்லுனரான ஜேம்ஸ்பாண்டின் பெயரை வைத்தார். இவான் தனது கதாபாத்திரத்திற்காக எளிமையான மற்றும் மந்தமான உணர்வை தரக்கூடிய ஒரு பெயரைத் தேடி ஜேம்ஸ்பாண்ட் என்று வைத்ததாகக் கூறுகிறார். ஜேம்ஸ் பாண்டின் இதர பழக்கவழக்கங்கள் மற்றும் குணாதிசயங்களை இவான் தனது சொந்த கருத்துக்களின் பிம்பத்தை வைத்தே உருவாக்கியுள்ளார். உதாரணத்திற்கு முட்டை உணவுகள், கால்ஃப் விளையாடுவது, மற்றும் சூதாட்டம் விளையாடுவது ஆகியவை இவானின் விருப்பங்களாகும். அதையே ஜேம்ஸ்பாண்டின் விருப்பங்களாக இவான் சித்திரித்துள்ளார்.