book

இரவல் காதலி

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செல்லமுத்து குப்புசாமி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :166
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789381975510
Add to Cart

 நாவலைப் பற்றிய பல குறிப்புகள் இதை ஒரு ஐடி துறை சம்பந்தப்பட்ட நாவல் என்று கூறுகின்றன. ஐடி துறையின் வளர்ச்சி காரணமாக சமூகத்தில் உண்டான மாற்றங்களை பேசுகின்றது என்றும் எழுதியிருந்தார்கள். பாத்திரங்கள் ஐடி துறையில் வேலை செய்வதால் மட்டுமே அப்பாத்திரங்களின் அனைத்து செயல்களுக்கும் அத்துறையே காரணம் என்ற மொன்னையான அபிப்ராயம் மட்டுமே இது. கள்ளக்காதல் எல்லா துறைகளிலும் நடக்கக்கூடியது.

கதை ஆரம்பம் என்னவோ ஐடி உலகை காட்டுவது போலத்தான் ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு துறைக்கும் சில தனித்துவமான சில விஷயங்கள் உண்டு. கதையோடு ஒட்டி அத்துறை ஞானத்தை கொஞ்சம் நம்முள் கடத்தலாம். அப்படி செய்தால் மட்டுமே அந்த நாவலை துறை சார்ந்த நாவல் என்று கூறலாம். உதாரணம் ஆழி சூல் உலகு, கரைந்த நிழல்கள்.  இதில் அது போன்ற விஷயங்கள் ஏதுமில்லை. சொல்லப்படும் சின்ன சின்ன விஷயங்களும் படிப்பவர்களிடம் ஒரு எதிர்மறை விளைவை ஏற்படுத்தும்படி ஒரு வித கிண்டலாகவே சொல்லப்படுகின்றது