book

ரத்தம் விற்பவனின் சரித்திரம்

Raththam Virpavanin Sarithram

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூமா வாசுகி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :303
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789384915087
Add to Cart

உங்களுக்குள் ஓடும் ரத்தம் உங்களுக்கு உங்கள் முன்னோர்களிடமிருந்து தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வந்தது. நீங்கள் எண்ணெய்ப் பலகாரம் விற்கலாம்; உங்கள் இடத்தை விற்றுத் தொலைக்கலாம்; ஆனால், ரத்தம் விற்கக்கூடாது. நீங்கள் ரத்தம் விற்பதைவிட உங்கள் உடலை விற்பதுதான் நல்லது. உங்கள் உடல் உங்களுடையது. ஆனால் ரத்தம் விற்பது என்பதற்கு உங்கள் முன்னோர்களை விற்பது என்பதுதான் அர்த்தம். நீங்கள் உங்கள் முன்னோர்களை விற்றீர்கள்.”

- ரத்தம் விற்றுவிட்டு வந்த கணவனிடம் ஸூ யுலான்...

‘ரத்தம் விற்பவனின் சரித்திரம்’ சீனாவின் மையப்பகுதிக்கு நம்மை இட்டுச் செல்கிறது. சாதாரண சீனர்கள் வாழும் நகரங்களுக்கும் தெருக்களுக்கும் முன்வாசலுக்கும் அடுக்களைக்கும் படுக்கையறைக்கும் நம்மை நகர்த்திச் செல்கிறது. இவர்கள் மாபெரும் வீரர்களோ அல்லது அரசியல்வாதிகளோ இல்லை. கண்ணியத்தோடும் நம்பிக்கையோடும் வாழ எத்தனிக்கும் இவர்களது துணிவும் முனைப்புமே இவர்களை உண்மையான அருஞ்செயல் வீரர்களாக்குகின்றன. இந்நூல் ஒரு மாணிக்கக்கல்.