Home » Tamil books » நீயும் நானும் வேறல்ல
நீயும் நானும் வேறல்ல
Neeyum Naanum Veralla
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :முத்து நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2012
Add to Cart தொடையைக்
கவ்விப்பிடித்திருந்த அரை பேன்ட்டும், அதற்குமேல் தொளதொள பனியனுமாய்
வீட்டினுள் நடந்தபடியே யாருடனோ 'செல்'பேசியில் பேசிக் கொண்டிருந்தான்,
சந்துரு.
பனியன் தளர்வாக இருந்தாலும் உடற்பயிற்சியால் மதர்த்திருந்த மார்பும், திண்ணென்ற தோள்களும் விடைத்து நின்றன.
சந்துரு என்ற பெயரை உச்சரித்தால், தொழில் உலகத்தில் 'ஓ... அவரா?' என்று புருவம் உயரும்.
முப்பது ஆண்டு உருண்டு புரண்டு வெற்றியைத் தொட்ட ஜாம்பவான்களையே மிரள வைத்தவன், சந்துரு. அவன் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுதான் ஆகிறது. ஆனால், அவனது வெற்றிகள் வியப்பைத் தரும்.
ஒரு தொழிற்சாலை என்றால், அதற்கான உபபொருட்களை வாங்க இன்னொரு தொழிற்சாலையை எதிர்பார்த்திருப்பதுதான் எங்கும் நிலவும் இயல்பான விசயம்.
அப்பா அமுதன் பொறுப்பிலிருந்தவரை அவரும் அப்படிதான் நிர்வகித்து வந்தார். அவர், திடீரென பக்கவாதத்தில் விழுந்து, கடுமையான சிகிச்சையால் தேறினாலும் முழு ஓய்வு அவசியம் என்பது மருத்துவரின் அறிவுரை.
அப்போதுதான் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருந்த சந்துரு, மேற்படிப்பைத் தொடர லண்டனில் எல்லா ஏற்பாடுகளும் முடித்துவிட்ட நிலை. தந்தை படுக்கையில் விழுந்தார்.
வேறு வழின்றி, தன் மேல்படிப்பைக் கைவிட்டு, உடனடியாக கம்பெனி பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.
நிர்வாகத்திலிருந்த குறைபாடுகளை கண்டறிந்து, தகுதியற்ற ஆட்களை களை எடுத்து, நன்கு படித்த இளைஞர் இளைஞிகளை பணியில் அமர்த்தினான்.
அனுபவஸ்தர்களை தனிப்பிரிவாக செயல்படச் செய்தான். அமுதன், கார் கம்பெனி நடத்திக்கொண்டிருந்தார். சந்துரு வந்தபின் உதிரிபாகங்களையும் தயாரித்தான். தவிர, உயர்ந்த சுவையுடன், குறைந்த விலையில் குளிர்பானம் தரும் முயற்சியில் இறங்கினான்.
அவன் கணக்கு, வீண்போகவில்லை.
சந்துருவின் 'ஜில்' குளிர்பானம் இப்போது விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது.
அதேபோல், தரமான காகிதத்தில் நோட்டு, புத்தகங்களை அச்சடித்து விற்றான்.
நல்ல பொருட்களை நியாயமான விலையில் கொடுப்பது போலவும் ஆயிற்று! நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலையும் அளித்தாயிற்று!
சந்துருவுக்கு இதில் கிடைத்த ஓரளவு லாபமும், மனதிருப்தியையும் மகிழ்வையும் தந்தன.
அம்மா லெட்சுமி, கம்பெனி காரியங்களில் என்றைக்குமே தலையிட்டதில்லை.
சந்துரு கலாரசிகன்!
இயற்கையையும், அழகையும் நேசிப்பவன்.
தோட்டத்தில் காதல் பறவைகள் உட்பட விதவிதமான பறவைகளை வளர்க்கிறான்.
கடற்கரையோரம் அமைந்திருந்த மாளிகை, ஓய்வான நேரங்களில் தன் அறையையொட்டிய பால்கனியில் இருந்தபடி, சீறிப் புறப்படும் சிப்பாய்கள் போல் அடுத்தடுத்து சோர்ந்துபோகாமல் வந்துகொண்டே இருக்கும் அலைகளை ரசிப்பது ரொம்பவே பிடிக்கும்.

Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neeyum Naanum Veralla, நீயும் நானும் வேறல்ல, ஆர். மணிமாலா, R. Manimala, Novel, நாவல் , R. Manimala Novel, ஆர். மணிமாலா நாவல், முத்து நிலையம், Devi Veliyeedu, buy R. Manimala books, buy Devi Veliyeedu books online, buy Neeyum Naanum Veralla tamil book.