book

எனது நிலா கண்ணிலே

Enadhu Nila Kannile

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :சசி நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

சற்றே வேகமாக வீசிய காற்றிற்கு மாமரத்தில் பறவைகள் இடம் மாறி அமர்ந்தன. மணி எட்டைத் தாண்டியிருந்தாலும், மார்கழிக் குளிர் சென்னையைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருந்தது, இன்னும். ஈரத் துணிகளை உதறி உலர்த்தி... க்ளிப்புகளை மாட்டி விட்டு பக்கெட்டுடன் உள்ளே வந்த செந்தாமரை ஐம்பதைத் தாண்டி நான்கு வருடமாகியிருந்தது. காலையிலேயே குளித்து முடித்து நெற்றியில் குங்குமம் திருநீறுமாய் மங்களகரமாய் இருந்தாள். சாத்துக்குடி அளவு கொண்டையில் ஒற்றைச் சாமந்திப் பூ. இடுப்பில் பெல்ட் கட்டிக் கொண்டே கம்பீரமாய் நடந்து வந்தான் பாலாஜி. அவளின் சீமந்த புத்திரன். முப்பதை நெருங்கும் வயது. காக்கி யூனிஃபார்மும், மார்பு பேட்ஜும் அவனை இன்ஸ்பெக்டர் என்றன. "என்ன பாலாஜி, அதுக்குள்ள கிளம்பிட்டே? இன்னும் டிபன் கூடச் சாப்பிடலே?"