book

உன் உள்ளம் நானறிவேன்

Un Ullam Naanariven

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :முத்து நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

மேற்கு நோக்கி சூரியகாந்தி பூக்கள் முகம் காட்டிக் கொண்டிருந்தன. ஒரு வரிசை முழுக்க கிட்டத்தட்ட ஐம்பது தொட்டிகளில் சூரியகாந்தி செடிகள்தான்! கையகலத்துக்கு கொத்துக் கொத்தாய் பளீரென்ற மஞ்சள் நிறத்தில் பூத்திருக்கும் அழகே தனிதான்! அவைகளைப் பார்க்கும் போதெல்லாம் சுகந்திக்கு நந்தனாவின் நினைவு நெஞ்சைக் கவ்வும். சிறுவயது முதலே தோட்டக்கலையில் ஈடுபாடுக் கொண்டிருந்த சுகந்தி படித்ததும் பி.எஸ்சி. அக்ரிகல்ச்சர்தான். தன் தணியாத தாகத்தை நர்சரி வைத்து ஓரளவு தணித்துக் கொண்டிருக்கிறாள்.