book

கு. அழகிரிசாமி கடிதங்கள் (கி. ராஜநாராயணனுக்கு எழுதியவை)

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கடிதங்கள்
பக்கங்கள் :175
பதிப்பு :2
Published on :2015
Add to Cart

கு. அழகிரிசாமி கடிதங்கள் கி. ராஜநாராயணக்கு எழுதியவை என்ற தலைப்பில் 1987ல் ஒரு புத்தகம் “அன்னம்” கொண்டுவந்தது. அதில் அழகரிசாமியின் கடிதங்கள் 19.7.1944லிருந்து 20.8.1948 வரையிலுள்ள 27 கடிதங்கள் வெளிவந்திருந்தன.

இப்போது 1944லிருந்து 1948 வரையிலான மொத்தம் 41. முழுமையான கடிதங்கள் கி.ராவுக்கு எழுதியவை கிடைத்திருக்கின்றன! இவைபோக அதேகால கட்டங்களில் “கு.அ. கி.ரா.”வுக்கு எழுதிய அரைகுறைக் கடிதங்கள் தேதி இல்லாமல் பக்கங்கள் குலைந்தும் கிடைத்துள்ளன. மொத்தத்தில் ஒரு புதையல் கிடைத்திருக்கிறது.

சீர்வில்லிபுத்தூர் (ஸ்ரீ வில்லிபுத்தூர்) பென்னிங்டன் நூலகத்துக்கு ஒரு பகுதி நூல்கள் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தேன். அதோடு எனது கையெழுத்துப் பிரதிகளையும், தந்து விடுவதாகச் சொல்லியிருந்தேன். அதற்காக இங்கே “குப்பை”களை ஒதுங்க வைக்கும் போது, ஒரு பழைய பெயர் தெரியாத அமெரிக்கப் ஆங்கிலேயப் பத்திரிகை (படஇதழ்) யின் மடங்கலுக்குள் இவை சிக்கியிருந்தன.

“குப்பையில் கிடக்கும் மாணிக்கம்” என்று சொல்லத்தான் கேட்டிருக்கிறோம்; இப்பொ நிசமாகிவிட்டது.