book

பெண் கதை எனும் பெருங்கதை

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :93
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

இத் தொகுப்பில் எழுந்து நிற்கும் மகத்துவம் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் துணை நின்ற, அரவணைத்த, ஆறுதல் அளித்த ஒரு உலகம். 'பெண்ணுக்குப் பெண்ணே எதிரி' என்பதைப் பொய்யாக்கிய உலகம். ஆணைச் சுற்றியே சுழன்ற உலகம் இல்லை; ஆணைக் கையில் போட்டுக் கொள்ளும் தந்திரங்கள் இல்லை. பெண்களுக்குள் போட்டிகளில்லை; பொறாமையில்லை. கோள் சொல்லுதலில்லை. மாமியார்-மருமகள் சண்டைகள் இல்லை; சக்களத்திகள் இல்லை. பெண்களுக்குள் ஒருமைப்பாடு உருவாக வேண்டும்; பேதங்களைக் கடந்த சகோதரித்துவம் பிறக்க வேண்டும். என்று பெண்ணியலாளர்கள் இன்று வேண்டுகின்றனர். மறைந்த உலகிலும், சிறு சிறு துளிகளாக சகோதரித்துவம் காணக் கிடக்கிறதோ! கி.ராவின் மற்ற பெண் கதைகள் அவ்வாறு இல்லை; நாட்டுப்புறக் கதைகளிலும் 'பெண்ணுக்குப் பெண் எதிரியான கதைகள் நிறையவே உண்டு. தற்பொழுது அவர் எழுதிய இந்தத் தொகுப்பில் காணும் பெண் உலகம் அவர் பொறுக்கி எடுத்து அளிக்கும் வேறொரு உலகம், தான் காண விரும்பும் ஒரு உலகம் என்று கொள்ளலாமா? அப்படி ஒரு உலகம் இருந்திருந்தால், மறைந்த அந்த உலகைத் தோண்டி எடுத்து, நமக்கு உரியதாக்கிக் கொள்ளலாமா? அந்த உலகிற்காக ஏங்கும் அவரது வரிகள், ஆண்களுக்கு எல்லைகள் வகுத்து,தங்களுக்கான உலகை நிறுவிக் கொண்ட பெண்கள்.ஆண்கள் பகிஷ்கரிக்கப்பட்ட அந்தரங்க உலகம்.அந்த உலகின் ஆளுமைகள்.அதன் அரவணைப்புகள்,அளித்த அடைக்கலங்கள்.வாழ்வைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களான பாட்டிமார்கள்,கதை கதையாக விரிந்த பாடங்கள். ‘பெண்கதை எனும் பெருங்கதை’ பலரும் அறியாத,ருசிகரமான,பெண்ணின் புதிய கோலங்களை,கோணங்களை அளிக்கிறது. பெரும் இலக்கிய ஆளுமை கி.ராஜநாராயணன் அவர்களின் இந்தத் தொகுப்பு,ஏற்கனவே வெளிவந்த அவரது தனித்துவ முத்திரை பதித்த வட்டார வாழ்வின்,வழக்கின்,குறிப்பாக அவர் கண்டெடுத்த பெண் கதைகளின் தொடர்ச்சி.