book

மேலாண்மை (அன்றும் - இன்றும் - என்றும்)

Mēlāṇmai (aṉṟum - iṉṟum - eṉṟum)

₹750
எழுத்தாளர் :இரா. சுப்பராயலு
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :630
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

இன்று மேலாண்மையியல் புதிதாக மேல்நாட்டிலிருந்து வந்துள்ளதாகக் கருத வேண்டியது இல்லை. அவர்கள் நம்நாட்டு அறநூல்களில் கண்ட மேலாண்மைத் தத்துவங்களைப் பார்த்து வியக்கின்றனர். ஜப்பானிய மேலாண்மைக் கோட்பாடுகள் மேல்நாட்டுக் கோட்பாடுகளை விஞ்சி நிற்கின்றன. என்றாலும் நாம் மேல்நாட்டு மேலாண்மை வழிமுறைகளுக்குப் பழகிவிட்டோம். முன்பெல்லாம் தமிழ்நாட்டில் அமாவாசை, பௌர்ணமி, பிரதமை, அஷ்டமி ஆகிய நாட்களில்தான் விடுமுறை இருந்தது. இப்போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பழகிவிட்டோம். ஆடைகளிலிருந்து அலுவலகம் வரை மேலைநாட்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. நம்நாட்டின் அறநூல்களில் உள்ள சிந்தனைகளையொட்டி மேலைநாட்டு மேலாண்மையைச் சொல்ல முயன்று இருபது ஆண்டுகளாக பல மேலாண்மை நூல்களை எழுதி வந்தேன். இவற்றைப் படித்துப் பயன்கொள்பவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். இதனைத் தனித்தனி நூல்களாகப் பயின்றவர்கள் உணர்ந்து பாராட்டியுள்ளார்கள். முழுமையான இந்நூல் தமிழில் மேலாண்மையைப் படிக்க விரும்புவோருக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்கும்; புரிதலை ஏற்படுத்தும், ஆர்வமுள்ளவர்கள் பயன் கொள்க.