
தாலாட்டும் மேகங்கள்
Thaalaattum Megangal
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
ஆதவன் கண் திறக்க... இன்னும் ஒரு மணி நேரமிருந்தது. வழக்கமாய் மலர்க்கொடி ஐந்து மணிக்கே கண் விழிப்பவள் என்பதால்... தன்னிச்சையாக இன்றும் விழித்துக்கொண்டாள். இரு கைகளையும் பரபரவென்று தேய்த்து... உள்ளங்கையில் முகம் பார்த்துக் கொண்டாள். சேலைக்குள் பதுங்கியிருந்த தாலிக்கொடியை எடுத்து பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக்கொண்டு... கட்டிலில் இருந்து இறங்க முற்பட்டவள்... சற்று நேரம்... பக்கத்தில் படுத்திருந்த கணவனை அன்பொழுகப் பார்த்தாள். ஐம்பது வயதைத் தொட்டிருந்த முரளிதரன், சிறு குழந்தையைப் போல்... கூனிக் குறுகி... இரு கைகளையும் கால்களுக்குள் புதைத்துக்கொண்டு... ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மலர்க்கொடி சத்தம் வராமல் சிரித்துக்கொண்டாள்.
