book

என் நெஞ்சமெல்லாம் நீதானே

En Nenjamellaam Needhaane

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மகேஸ்வரி
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

மணப் பெண்ணின் இயல்பான நாணத்துடன்... மருண்ட விழிகளுடன்... குங்குமமாய் சிவந்த கன்னத்துடன்... தலைகுனிந்து மாங்கல்யத்தை வாங்கிக் கொள்ளும் புது மணப் பெண்ணைப் போல் உருவெடுத்து, பின்னர்  வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும்... நஷ்டங்களையும்... பாதிப்புகளையும், தன்னம்பிக்கையுடனும்... தலைநிமிர்வுடனும் சமாளிக்கும்... தைரியப் பெண்ணைப் போல் நிதானமாய்... நிமிர்வாய்... கர்வமாய்... பளிங்காய்... மிடுக்கான தோற்றத்தோடு காட்சியளித்தான், சூரியன்!

தோட்டத்து மலர்கள் எல்லாம் மலர்ந்து... மணம் பரப்பி... இதற்கு மேல் தங்களிடம் நறுமணத்திற்கு பஞ்சம் என்று... தன்னடக்கத்துடன் தலையாட்டி சிரித்தான்!

அழகான... இனிமையான காலை எட்டு மணி!

அது ஒரு அநாதை இல்லம்!

சுபாஷ் சந்திரபோஸ் ஆதரவற்றோர்... பார்வையற்றோர் அநாதை இல்லம்.