
சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. ஜீவபாரதி
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :117
பதிப்பு :4
Published on :2018
Add to Cartகார்க்கி என்கிற சொல் சமூக அவலங்களின் மீது 'கசப்புற்றவன்' கைத்துப் போனவன் என்று பொருள் கொண்டு நின்றது 1917 நவம்பர் வரையிலும். இன்றோ கார்க்கி என்பது ஒரு சொல் அல்ல; தத்துவம். போர்க்குணம் மிகுந்த மனிதாபிமானம். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை கீதம், புதியதோர் உலகுக்கான இலட்சியப் பிரகடனம் என்று ஓ, அதுதான் எத்தனை அர்த்தங்கள் செறிந்த ஒரு மனோரஞ்சிதமாய்ப் பரிமளிக்கிறது!
கார்க்கி என்பது ரஷ்யச் சொல்லாயிருக்கலாம். ஆனால், அந்த ரஷ்ய மொழி பேசி எழுதியதால் மாக்சிம் கார்க்கி ஒரு ரஷ்யனல்ல. அவன் சரத் சந்திரருக்கு வங்காளி, காண்டேகருக்கு மராட்டியன், கேசவதேவுக்கு மலையாளி, ஜீவாவுக்குத் தமிழன். ஒரு நிருதனுக்கு (நீக்ரோ) கார்க்கி நிருதன்; ஒரு சிவப்பிந்தியனுக்கு அவன் சிவப்பிந்தியன். சரியாகச் சொல்வதானால், அவன் ஒரு மனிதன். அவனது மொழி மனிதம்.
