
பூ பூக்கும் நேரம்
Poo Pookkum Neram
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :344
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
பூ பூக்கும் நேரம் - - கிழக்கு நோக்கி கம்பீரமாய் நின்றிருந்தது.... அந்த பிரம்மாண்டமான பங்களா! விடியலை பிரசவித்து சில நிமிடங்களே ஆகியிருந்தன. சூரியனின் பிஞ்சுக் கதிர்கள் பங்களாவின் கிரானைட் சுவர்களுக்கு மேலும் பளபளப்பு ஏற்றிக் கொண்டிருந்தன. பங்களாவைச் சுற்றி மதில் சுவர் கட்டி... அதன்மேல் உடைந்த கண்ணாடி சில்லுகளைப் பொருத்தியிருந்தனர். புற்களை மோப்பம் பிடித்தபடி நாலைந்து உயர்ரக நாய்கள் ரோந்து போக... அவற்றை இணைத்திருந்த சங்கிலிகளைக் கொத்தாய்... கெட்டியாய்ப் பிடித்தபடி... அவை இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடிக்கொண்டிருந்தான்... வேலையாள் தேசப்பன். "ஏலே... இதுங்களை அங்கிட்டு இழுத்துட்டுப் போலே..." கண்களில் பயம் தேங்கியிருக்க... செடிகளுக்கு ரப்பர் குழாய் மூலம் தண்ணீர்விட்டுக் கொண்டிருந்த முண்டாசு கட்டியிருந்த முத்துசாமி, தேசப்பனிடம் கூற... சிரித்தான் தேசப்பன்.
