book

பூஜைக்கு வந்த மலரே வா

Poojaiku Vandha Malare Vaa

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :சசி நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :296
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

பூஜைக்கு வந்த மலரே வா...! அலாரம் கதற ஆரம்பித்தது. சவுந்தர்யா புரண்டு படுத்தாள். அப்போதும், விட்டேனா பார் என்று கத்துவதை நிறுத்தாமல் அவளை எழுப்பி உட்கார வைத்தது. சவுந்தர்யா கண்களை திறக்காமலேயே அந்த குட்டி பிசாசை தடவி 1 தலையில் தட்டினாள். அவள் கைபட்ட சுகத்திற்கு மகிழ்ந்து அடங்கிப் போனது. மணி ஐந்து! கண்களைத் திறக்கக் கூட முடியவில்லை. தூக்கம் அழுத்திற்று. மெல்ல எழுந்து வந்து முகம் கழுவினாள். ஜில்லென்ற தண்ணீர் தூக்கத்தை விரட்டி புத்துணர்ச்சியைத் தந்தாலும், கண்களின் எரிச்சல் குறையவில்லை.