ராஜ யோகம்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :232
பதிப்பு :29
Out of StockAdd to Alert List
ஆண்களுக்கு ஆத்திரம் இருக்கிறதே தவிர, எதையும் ஒழுங்காக சுவடு தெரியாமல் செய்து முடிக்க தெரியவில்லை என்று தனக்குள் அவள் எண்ணமிட்டதால், அவள் கண்கள் அவன் கண்களைப் பார்த்து வெட்கநகை நகைத்தன. அவள் இடதுகை, சேலையை சிறிது நன்றாக போர்த்தி கொண்டது. அந்த சமயத்தில் அவள் ஏதோ பேச முற்படவே, அவள் வாயை இறுகப் பொத்திய இளம்பரிதி அவள் கண்களுடன் கண்களைப் பூர்ணமாகக் கலந்தான். பூசலம்புகள் என்று கம்பன் கோசல நாட்டுப் பெண்களை வர்ணித்ததன் பொருளை அன்று புரிந்து கொண்டான் அந்த வாலிபன். அவள் கண்கள் அவன் கண்களை அம்புகள் போல் தைரியமாக ஊடுருவி நின்றன. அந்த அம்புக் கண்கள் தன் கண்களின் மூலமாக தனது உள்ளத்திலும் பாய்ந்து விட்டதை சந்தேகமற உணர்ந்தான் அந்த வாலிபன். அதனால் வாயைப் பொத்திய கையை எடுக்கவும் வலிமையற்றவனானான் அவன். அவன் உள்ளங்கையில் பதிந்து கிடந்த செம்பவள உதடுகள் சற்றே விரிந்து அசைந்தது, அவன் உடலை மின்சாரம் போல் ஊடுருவிச் சென்றது. அந்த உதடுகள் அசைந்து உதிர்க்க முடியாத சொற்களை அவள் கருவிழிகள் சொல்லின. விழிகள் ஒருமுறை வாஸப்பின் பக்கம் சென்று மீண்டும் இளம்பரிதியை நோக்கின. பிறகு அவள் தனது பார்வையை தனது மார்பு மீதே ஓட விட்டாள்.
கண்கள் அலைந்த காரணத்தை உணர்ந்து கொண்ட இளம்பரிதி, மீண்டும் அவள் வாயிலிருந்த தனது வலது கையை அகற்றி அவளது மார்புச் சீலைக்குள் சிறிது தைரியமாகவே செலுத்தினான். அங்கு எதையோ தேடினான். பிறகு கிடைத்ததை ஒரு முறை தனது இரு விரல்களால் நெருடினான். பிறகு கையை எடுத்து அவள் சொன்னது சரி என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான். பிறகு திடீரென அவள் முதுகுப்புறத்தில் கைகளைக் கொடுத்து அவளை அப்படியே தூக்கிக் கொண்டான்.
எதிர்பாராத இந்த நிகழ்ச்சி வாஸப்பின் இரு அடிமைகளை வியப்புக்குள் ஆழ்த்தினாலும், அப்துல்லா வாஸப் எந்தவித வியப்பையோ உணர்ச்சி களையோ காட்டவில்லை. தொழுகையை முடித்து எழுந்து நின்ற பாரசீகனான அப்துல்லா, தனது கண்களை மட்டும் பெண்ணைத் தூக்கி நின்ற தனது துணைவனான இளம்பரிதி மீது நிலைக்க விட்டான். அப்துல்லாவின் கண்களில் புதைந்து கிடந்த கேள்வியைப் புரிந்து கொண்ட இளம்பரிதி, “ இவள் அபாயம் இன்னும் தீரவில்லை ; நமது அபாயமும் தீரவில்லை “ என்று பதில் கூறினான்.
அவன் பதில் அத்தனை திருப்தியாகப் படாததால் வாஸப் வினவினான் வாலிபனை நோக்கி, “இவள் யார்?” என்று.
“சொல்ல இயலாத நிலைமையில் இருக்கிறேன்” என்றான் இளம்பரிதி
“புரிகிறது. நீயும் பாண்டிய வீரனல்லவா?” என்று சொன்ன அப்துல்லா வாஸப், “ஒரு விஷயத்தை மட்டும் சொல். இவளை நாம் காக்க வேண்டுமா?” என்று வினவினான்.
இளம்பரிதி புன்முறுவல் கொண்டான். “சற்று முன்பு நீங்களே சொன்னீர்கள். தொழுகை நேரத்தில் சரணடைந்தவர்கள் சர்வ வல்லமையுள்ள ஆண்டவன் பாதுகாப்புக்குள் வந்து விடுகிறார்கள் என்று” என வாஸப்பின் பழைய சொற்களை அவன் மீதே திருப்பினான் இளம்பரிதி.
அப்துல்லா இளம்பரிதியை விஷமப் பார்வையாகப் பார்த்தான். “இனி ஆண்டவன் பாதுகாப்பு இவளுக்கு அவசியமில்லை” என்றும் கூறினான், விஷமம் சொற்களிலும் உதிர்க்க.
“ஏன்?” வாலிபன் கேள்வியில் சலனமிருந்தது.
“நீ அவளைத் தூக்கிக் கொண்டு விட்டாய். ஆகையால் உன் பாதுகாப்பு அவளுக்கு ஏற்பட்டு விட்டது” என்றான் வாஸப்,
“நாம் ஆண்டவனின் கரங்கள். நாம் செய்வது என்பது ஏதுமில்லை. இதுவும் நீங்கள் சொன்னது என்று குறிப்பிட்டான் இளம்பரிதி.
“இளம்பரிதி! நீ மிகவும் கெட்டிக்காரன் சரி, இவள் யார் என்பதைச் சொல்” என்று வினவினான்.
“திட்டமாகத் தெரியாது எனக்கு” என்று சிறிது பொய்யைச் சொன்னான் வாலிபன்.
அப்துல்லாவின் குரல் நகைப்புடன் ஒலித்தது. “அவள் மார்புச் சேலைக்குள் கைவிட்டாய், அங்கு எதையோ நெருடினாய்' என்று சொன்னான் அப்துல்லா.
இதைக் கேட்டதும் அந்த அழகியின் விழிகளில் சீற்றம் தெரிந்தது. ஆனால் அதை தன் பார்வையால் அடக்கினான் இளம்பரிதி. “ஆம். ஆனால் முறை கேடாக எதையும் செய்யவில்லை” என்றான் பாண்டிய நாட்டு வாலிபன்.
“அது எனக்குத் தெரியும். சரி, நீ சொல்லா விட்டால் நான் சொல்கிறேன். நீ நெருடிய பொருளின் கனம் எவ்வளவு?'என்றொரு கேள்வியை -அல்ல - பெரிய அஸ்திரத்தை வீசினான் அப்துல்லா.
அதுவரை வாளாவிருத்த அந்த வனிதை தன் விந்தை இதழ்களில் முறுவல் கூட்டினாள். அதுவரை பொறுமை - காட்டிய இளம்பரிதி பொறுமையை இழக்கத் துவங்கிவிட்டதை அவன் முகம் காட்டியது. இத்தனைக்கும் அப்துல்லா சிறிதளவும் சினம் கொள்ளவில்லை. “நீ நெருடியதை நானே பார்த்தேன். இவள் யாரென்பதை நீ சொல்ல வேண்டாம். நானே சொல்கிறேன், கேள்” என்றும் கூறினான்.
தன் அந்த சமயத்தில் மீண்டும் இளம்பரிதியின் கண்களை, அந்த இளமங்கையின் கண்கள் சந்தித்தன. பிறகு அவை அப்துல்லாவை நோக்கின. அந்த நோக்கில் ஏதோ அழைப்பு இருந்தது. அப்துல்லா அவளை நோக்கி நடந்து சென்றான்.