சந்திரமதி
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :106
பதிப்பு :14
Published on :2018
Add to Cart'சந்திரமதி' என்ற இந்தச் சிறு நாவல் மேவார் ராணா அமரசிம்மன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சிறு சம்பவத்தைக் கொண்டு புனையப்பட்டிருக்கிறது. சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகள் அக்பரிடம் போரிட்டு மேவார் சுதந்திரத்தைக் காப்பாற்றிய ராணா பிரதாப சிம்மன் தனக்குப் பின்னால் மேவாரின் சுதந்திரம் பறிபோய்விடும் என்று நம்பினான். சுகத்துக்காக சுதந்திரம் தியாகம் செய்யப்படும் என்று எண்ணினான். ஆகவேதான் இறக்கும் தருவாயில் தனது படைத் தலைவர்களிடம், "சுகத்தை நாடி சுதந்திரத்தை இழக்க மாட்டோம்" என்று சத்தியமும் வாங்கிக்கொண்டான்.
ஆனால் பிரதாப் எதிர்பார்த்ததுதான் நடந்தது. அவன் மகன் அமரசிம்மன் ராணாவானதும் உதயபூர் ஏரிக்கரையில் சலவைக்கல் அரண்மனை ஒன்றைக் கட்டினான். பிரிட்டிஷ் கண்ணாடியை வாங்கித் தனது தர்பார் மண்டபத்தை அழகு செய்தான். நாட்டை மறந்து போக வாழ்க்கையில் மூழ்கினான். இந்த நிலையைத் திருத்த சலூம்ப்ரா வம்சத்தவனான சந்தசிம்மன் முயன்றான்.