book

விமானத்தின் கதை

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முல்லை.பிஎல். முத்தையா
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

கடைசியாக, 1783-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி, பிலாத்ரேடே ரோஸியே, மார்க்விஸ் டார்லான்டே என்னும் பிரான்சு நாட்டினர் இருவர், தாங்கள் உருவாக்கிய பலூன் ஒன்றில் ஏறி, தரையிலிருந்து உயரச் சென்றனர்.
பாரிஸ் நகரத்துக்கு மேலே 25 நிமிடங்கள் அவர்கள் பறந்தனர்.
மனிதன் முதன்முதலாகப் பறந்தது அப்பொழுது தான்! அடுத்து, விரைவில் மற்றொரு வெற்றியும் அவர்களுக்குக் கிடைத்தது. அதற்குள் ஆங்கிலேய இரசாயனி காவென்டிஸ், காற்றைவிட மிகவும் இலேசான ஹைட்ரஜன் வாயுவைக் கண்டு பிடித்திருந்தார்.
சார்லஸ் என்னும் பிரெஞ்சு பௌதிக நிபுணர் ஒருவர் பட்டுத் துணியினால் செய்த பலூன் ஒன்றை ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பி, அதை மேலே உயரச் செல்ல விட்டார். அது ஆச்சரியப்படும்படி நன்றாகப் பறந்தது.
அடுத்து, ஹைட்ரஜனை நிரப்பிய பல பலூன்களும் பிறகு பறக்கவிடப்பட்டன.