book

விழுப்புரம் படுகொலை 1978

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்டாலின் ராஜாங்கம்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :159
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969069
Add to Cart

" இன்று பெரும்பாலாரோல் மறக்கப்பட்டுவிட்ட விழுப்புரம் படுகொலைகள் பற்றிய முக்கிய ஆவணம் 'விழுப்புரம் படுகொலை 1978' என்கிற இந்நூல். ஒரு தலித் பெண்ணை ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவர் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத ்ததைத் தலித்துகள் தட்டிக்கேட்க, மூண்ட கலவரத்தில் 12 தலித்துகளைப் பலி வாங்கிவிட்டுதான் அடங்கியிருக்கிறது ஆதிக்கச் சாதி வெறி. ""கொல்லப்பட்ட 12 தலித்துகளும் பிரச்னையில் சம்பந்தப்பட்ட விழுப்புரம் பெரிய காலனியைச் சேர்ந்தவர்கள் அல்ல"" என்கிற செய்தி ஆதிக்கச் சாதியின் வன்மத்தைச் சுட்டுகிறது. அரசியல் நிர்ப்பந்தத்தின் காரணமாக இந்தப் படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் கமிஷனின் தலித் விரோதப் போக்கை எதிர்த்து தலித்துகளின் சார்பாக நின்று பேசும் இந்த நூலில் ஒரு சட்ட வல்லுனரின் லாவகத்தோடு நடந்ததை விளக்கிச் செல்கிறார் ஆசிரியர் டி. டேவிட். விசாரணை கமிஷனின் முன் இடையீடாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆவணத்தை சமீபத்திய கள ஆய்வுகள், பேட்டிகள், புகைப்படங்களோடு விரிவான ஒரு புத்தகமாகப் பதிப்பித்திருக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் தலித்துகளுக்கு எதிராகத் தொடரும் வன்முறையை 'சமூக மோதல்'களாகக் குறுக்கிவிடும் அதிகார வர்க்கத்தின் ஆதிக்க சாதி வெறியை விழுப்புரம் படுகொலைகளின் மூலம் இந்த நூல் தக்க சான்றுகளுடன் அம்பலப்படுத்துகிறது. விழுப்புரம் முதல் பரமக்குடி வரை தசாப்தங்கள் கடந்து நீளும் அதிகார வர்க்கத்தின் தலித் விரோதப் போக்குக்கு ரத்த சாட்சியாக இருக்கிறது இந்நூல். - கவிதா முரளிதரன்"