book

பதினென்கீழ்க்கணக்கு நூல் ஏலாதி மூலமும் உரையும்

PathinenKeezhkkanakku Nool Elathi Moolamum Uraiyum

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :104
பதிப்பு :10
Published on :2018
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல்
Add to Cart

இல்லறநூ லேற்ற துறவறநூ லேயுங்கால் சொல்லறநூல் சோரவின்றித் தொக்குரைத்து -நல்ல அணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியுங் கணிமேதை செய்தான் கலந்து.  (இதன் பொருள் ) நல்ல -சிறந்த ,அணி மேதையாய் -அழகிய அறிவினையுடையவளே ! கணிமேதை யென்னும் புலவர் , இல்லற நூல் - இல்லறவொழுக்கம் கூறும் நூலையும் ,ஏற்ற துறவறநூல் - பொருத்தமான துறவற வொழுக்கங்கள் கூறும் நூலையும், ஏயுங்கால் - ஏற்ற விடங்களில், வீட்டுநெறியும் கலந்து - வீடெய்தும் நெறிபற்றிய உரைக்கூறுகளையும் ஆராய்ந்து, நல்ல - மேலஆன , சொல் அறநூல -பாராட்டப்படும் ஏலாதி யென்னும் இவ் வறநூலை, சொர்வு இன்றி- குற்ற மில்லாமல், தொக்கு உரைத்து - தொகுத்துக் கூறி, செய்தான் - இயற்றினான்.