book

அடியந்திரம்

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஷல் குமார்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :172
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392876141
Add to Cart

''தள்ளிப் போங்கல், பெரிய மத்தவனுவோ மாதி நிக்கானுவோ, குண்டியச் சொறிஞ்சிட்டு. விடியாண்டாம், முழுங்கதுக்கு வந்துட்டானுவோ,'' என்று எல்லோருக்கும் கேட்கும் படி முனகியபடி தன் லோடு-சைக்கிளை உருட்டியபடி வந்து நின்றாள் மாவிசக்தி அக்கா. அவள்  குரல் கேட்டதும் அங்கு நின்றிருந்த ஒவ்வொருவரும் ஒரு நொடி அதுவரை பேசிக்கொண்டிருந்ததை மறந்தபடி தங்கள் இடத்திலிருந்து அசைந்து முன்னோ பின்னோ விலகி அவளுக்கு ஒதுங்கி நின்றனர். நான் அருகிலிருந்த வேப்பமூட்டில் உறக்கக்கலக்கம்  தீராமல் கொட்டாவி விட்டபடி உட்கார்ந்திருந்தேன். சுற்றில்ம் பீடியும் சிகரட்டும் கலந்த புகை நாற்றம்.