ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜீவ கரிகாலன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788195343485
Add to CartMusic குறிப்பாக Jazz தவிர்க்கவியலாமல் முரகாமியின் கதைகளில் வருவது போல ஜீவ கரிகாலனுக்கு ஓவியம். தொகுப்பில் பல கதைகளில் ஓவியம் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே வருகின்றது. ஒரு சைக்கோ பற்றிய கதையில் கூட ஓவியம் தவிர்க்க முடியாது இடம் பெறுகிறது. ஜீவ கரிகாலன் எடுத்துக் கொள்ளும் கதைக்களங்கள் மட்டுமில்லை, கதைகளும் வித்தியாசமானவை. ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முரகாமி எழுதியது என்றால் பாதிப்பேர் நம்பிவிடுவார்கள். திருமுகம் கதையின் நடை அதற்கு முற்றிலும் வேறானது. அது போலவே பல கதைகள் ஒரே எழுத்தாளரின் சாயலை இழந்து நிற்பவை.