book

யவனிகா ஸ்ரீராம்: ஒரு வாசிப்பு

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷங்கர் ராமசுப்ரமணியன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :172
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னாளபட்டி எனும் ஊரில் இராமசாமி மகமாயி அம்மாள் தம்பதியினரின் இரண்டாவது மகனாக 1959-இல் பிறந்தவர் இளங்கோவன் என்ற யவனிகா ஸ்ரீராம். கடந்த முப்பது ஆண்டுகளாய் தமிழ் நவீன கவிதைப் பரப்பில் தொடர்ந்து இயங்கி வருகிறார். வணிகமும் விவசாயமும் சார்ந்த குடும்பமெனினும் பல்வேறு நிலங்களில் பயணிக்க நேர்ந்ததில் சேகரித்த மொழியே எனது பிரதிகள் எனும் இவர், தொடர்ந்து சிற்றிதழ்களில் கட்டுரைகள், விமர்சனங்களை எழுதி வருகிறார். தமிழ் படைப்புலகில் முப்பது ஆண்டுகளை நிறைவு செய்யும் யவனிகா ஸ்ரீராம் படைப்புலகத்தையும் அதற்குப் பின்னால் இயங்கும் பார்வைகளையும் அறியும் வகையில் ஷங்கர்ராமசுப்ரமணியன் இந்த நூலை தொகுத்துள்ளார். முதலாளித்துவம் துவங்கிய காலகட்டத்தில் எந்திரங்கள் மனிதனை அவனது உற்பத்தியிலிருந்து அந்நியமாக்கினாலும் ஓரளவு தன்னிறைவுக்கும் வாழ்வாதாரத்துக்குமான வழிகளையாவது விட்டுவைத்திருந்தன. ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு மனிதர்கள் ஈடுபடுவதற்கு எந்திரங்கள் கூடப் பறிக்கப்பட்டுவிட்டன. பூர்வ நிலங்களிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட மக்கள் உலக வரைபடத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணிக்கும் காலம் இது. அந்த நிலைமைகளை கவிஞன் யவனிகா ஸ்ரீராமைப் போலத் தமிழில் கலையழகுடனும் தீர்க்க தரிசனத்துடனும் உரைத்த ஒரு மார்க்சியக் கவிஞன் வேறு யாருமில்லை. யவனிகா ஸ்ரீராமின் ஆளுமையையும் அவரது உலகத்தையும் தெரிந்துகொள்ள ஒரு சிற்றண்டம் போல இந்த நூல் வாசகருக்கு உதவக்கூடியது.